/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பங்கார்பேட்டை சாலை ரூ.20 கோடியில் விரிவாக்கம்
/
பங்கார்பேட்டை சாலை ரூ.20 கோடியில் விரிவாக்கம்
ADDED : மே 15, 2025 11:21 PM
பங்கார்பேட்டை: ''தங்கவயல் ஆலமரம் பகுதியில் இருந்து, கிருஷ்ணாபுரம் வரை டபுள் ரோடு அமைக்கும் பணிகள் துவங்கும்,'' என்று பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., எஸ்.என். நாராயணசாமி தெரிவித்தார்.
தங்கவயல் தொகுதியின் வார்டு எண் 1 துவங்கும் இடம், பெமல் நகர் ஆலமர சதுக்கம். இங்கு தான், தங்கவயல் -- பங்கார்பேட்டை சாலையின் சந்திப்பும் உள்ளது. இந்த சந்திப்பில், பங்கார்பேட்டை -- பேத்தமங்களா சாலையும் இணைகிறது. பேத்தமங்களா சாலையில் தான் கிருஷ்ணாபுரமும் உள்ளது.
பங்கார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஆலமரம் அருகே உள்ள டி.கே.ஹள்ளி எனும் தொட்டூர் கர்ப்பனஹள்ளி என்ற கிராம பஞ்சாயத்து பகுதியில் நேற்று பங்கார் பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி, கிராம பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் குமார், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோர் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தனர்.
எம்.எல்.ஏ., நாராயணசாமி கூறுகையில், ''பங்கார்பேட்டை -- தங்கவயல் சாலையில், தாசரஹள்ளி வரையில் டபுள் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை தாசரஹள்ளி முதல் ஆலமரம் வரையிலும்; ஆலமரம் முதல் கிருஷ்ணாபுரம் வரையிலும் டபுள் ரோடாக விஸ்தரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக 20 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் டபுள் ரோடு அமைக்கும் பணி துவங்கும்,'' என்றார்.