ADDED : ஜூலை 18, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.ஆர்., நகர்: சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு ஆர்.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார், 25. இவர், தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். தான் பணிபுரிந்த வங்கியிலேயே, கடன் வாங்கி மொபைல் போன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். லட்சக்கணக்கான ரூபாயை இழந்துள்ளார்.
வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல் திகைத்துள்ளார். மன உளைச்சலில் நேற்று தன் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு, அவரது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து வைத்திருந்தார்.