/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாடிக்கையாளர்கள் பெயரில் நகைக்கடன் ரூ.3 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர்
/
வாடிக்கையாளர்கள் பெயரில் நகைக்கடன் ரூ.3 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர்
வாடிக்கையாளர்கள் பெயரில் நகைக்கடன் ரூ.3 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர்
வாடிக்கையாளர்கள் பெயரில் நகைக்கடன் ரூ.3 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர்
ADDED : டிச 30, 2025 06:43 AM

மல்லேஸ்வரம்: வாடிக்கையாளர் பெயரில் நகைக்கடன் எடுத்து, மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த, கனரா வங்கி மேலாளரை போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு மல்லேஸ்வரம் 15வது கிராசில், கனரா வங்கி உள்ளது. இங்கு மூத்த மேலாளராக பணியாற்றியவர் நந்திமண்டலம் ரகு, 36. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் சகஜமாக பேசி பழகியதால் ரகுவை, நிறைய பேருக்கு பிடித்து இருந்தது.
இந்நிலையில், சில வாடிக்கையாளர்களை அணுகிய ரகு, 'என் வீட்டில் குடும்ப பிரச்னை உள்ளது. பண தேவையால் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறேன். என்னிடம் நிறைய நகை உள்ளது.
நான் வேலை செய்யும் வங்கியில் நகையை அடகு வைத்து பணம் பெறுவதில், தொழில்நுட்ப சிக்கல் உள்ளது. உங்கள் பெயரில் நகைகளை அடகு வைத்து கொள்கிறேன். சரியாக வட்டி செலுத்தி விடுகிறேன்' என்று கூறியுள்ளார்.
ரகுவை நம்பிய, 30க்கும் மேற்பட்டோர், தங்கள் பெயரில் நகைக்கடன் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வாடிக்கையாளர்கள் பெயரில், நகைக்கடன் வாங்க ரகு விண்ணப்பித்து உள்ளார்.
வாடிக்கையாளர்கள் மொபைல் போனுக்கு செல்லும், ஓ.டி.பி., நம்பரையும் வாங்கி அதனை பயன்படுத்தி, வங்கியில் இருந்து பணம் வாங்கி உள்ளார். ஆனால், வங்கியில் நகைகளை அடகு வைக்கவில்லை.
கடந்த, 20ம் தேதி வங்கியில் கணக்கு தணிக்கை நடந்த போது, நகைகளை அடகு வைக்காமலேயே, நகைக்கடனாக பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கும் வங்கியில் இருந்து குறுந்தகவல் சென்றது.
இதற்கிடையில், ரகு திடீரென மாயமானார். வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று ரகு தங்களை அணுகியது பற்றி கூறினார். அப்போது தான் வாடிக்கையாளர்கள் பெயரில் நகைக்கடன் கணக்கு துவக்கி, 3.11 கோடி ரூபாயை ரகு மோசடி செய்தது தெரிந்தது.
வங்கி அதிகாரிகள் அளித்த புகாரில், தலைமறைவாக உள்ள ரகுவை, மல்லேஸ்வரம் போலீசார் தேடுகின்றனர்.
இந்த மோசடியில், மற்ற ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்றும், விசாரணை நடக்கிறது.

