/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பேரனை மதுபானம் குடிக்க வைத்த தாத்தா மீது நடவடிக்கை பாயுமா?
/
பேரனை மதுபானம் குடிக்க வைத்த தாத்தா மீது நடவடிக்கை பாயுமா?
பேரனை மதுபானம் குடிக்க வைத்த தாத்தா மீது நடவடிக்கை பாயுமா?
பேரனை மதுபானம் குடிக்க வைத்த தாத்தா மீது நடவடிக்கை பாயுமா?
ADDED : டிச 30, 2025 06:43 AM
பெலகாவி: குடிப்பழக்கம் உள்ள முதியவர், தன் 3 வயது பேரனை பாருக்கு அழைத்து சென்றதுடன், அவனை மதுகூடத்துக்கு குடிக்க வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகாவில் உள்ள ஒரு பாருக்கு, நேற்று முன் தினம் மாலை முதியவர் ஒருவர் மதுபானம் குடிக்க வந்தார். தன்னுடன் 3 வயது பேரனையும் அழைத்து வந்திருந்தார். இருக்கையில் பேரனை அமர வைத்தார்.
தான் மதுபானம் குடித்ததுடன், பேரனுக்கும் டம்ளரில் மதுபானத்தை ஊற்றி கொடுத்து, பலவந்தமாக குடிக்க வைத்தார். அங்கிருந்தவர்கள் கண்டித்தும் முதியவர் கேட்கவில்லை. மதுக்கூட உரிமையாளரும் இதை கண்டும், காணாமல் இருந்தார். சிறுவனை மதுக்கூடத்துக்கு அழைத்து வந்ததே பெரிய தவறு. அதிலும் அவரை மதுபானம் குடிக்க வைத்து, சிறுவனின் உயிருடன் விளையாடியது சரியல்ல என, அப்பகுதியினர் முதியவரை திட்டினர்.
சிலர் சிறுவன் மதுபானம் குடிப்பதை வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது பரவியுள்ளது. பலரும் அதிர்ச்சி அடைந்தனர். முதியவர் மீதும், மதுக்கூட உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

