/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நம் கலாசாரம், பண்பாட்டை அழிக்க முயற்சிக்கும் பானு முஷ்டாக்: பிரதாப்
/
நம் கலாசாரம், பண்பாட்டை அழிக்க முயற்சிக்கும் பானு முஷ்டாக்: பிரதாப்
நம் கலாசாரம், பண்பாட்டை அழிக்க முயற்சிக்கும் பானு முஷ்டாக்: பிரதாப்
நம் கலாசாரம், பண்பாட்டை அழிக்க முயற்சிக்கும் பானு முஷ்டாக்: பிரதாப்
ADDED : ஆக 27, 2025 10:52 PM

மைசூரு : ''நமது கலாசாரம், பண்பாட்டை கஜினியும், முகலாயர்களும் அழிக்க முயற்சித்தது போன்று, பானு முஷ்டாக்கும் நம் நம்பிக்கையை அழிக்க முயற்சிக்கிறார்,'' என மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த 2023ல் நடந்த மக்கள் சாகித்ய நிகழ்ச்சியில், 'கன்னட கொடிக்கு மஞ்சள், குங்குமம் நிறம் கொடுத்து புவனேஸ்வரி தாயாக்கி விட்டீர்கள்.
எப்படி கன்னடத்தை கற்க முடியும்' என்று பானு முஷ்டாக் பேசியிருந்தார். கன்னட மொழியை புவனேஸ்வரியாக ஏற்றுக் கொள்ளாத பானு முஷ்டாக், சாமுண்டியை மட்டும் 'நாடதேவி'யாக ஏற்றுக் கொள்வாரா.
மஞ்சள், குங்குமத்தை தவிர்க்கிறார். ஹிந்துக்களின் வீடுகளில் விசேஷம், பண்டிகைக்கு சென்றாலோ, கோவில்களுக்கு சென்றாலோ பிரசாதமாக மஞ்சள், குங்குமம் வழங்கப்படும். இதுதான் அவர் தவிர்க்க காரணம்.
நமது கலாசாரம், பண்பாட்டை கஜினியும், முகலாயர்களும் அழிக்க முயற்சித்தது போன்று, பானு முஷ்டாக்கும் நம் நம்பிக்கையை அழிக்க முயற்சிக்கிறார். தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் தாய் மொழி தமிழ். ஆனால் கர்நாடகாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கன்னடம் தாய் மொழியாக இருக்க கூடாதா.
பானு முஷ்டாக், முஸ்லிம் என்பதால் அவரை எதிர்க்கவில்லை. முஸ்லிம்கள் திப்பு சுல்தான் ஜெயந்தியை கேட்கவில்லை. அவரை 'தாஜா' செய்ய, சித்தராமையா திப்பு ஜெயந்தியை அமல்படுத்தினார்.
அதுபோன்று தசராவை துவக்கி வைக்க பானு முஷ்டாக் பெயரை முஸ்லிம்கள் பரிந்துரைக்கவில்லை. முதல்வர் தான் முடிவு செய்துள்ளார்.
இவ்விஷயத்தில் மாநில தலைவர், எதிர்க்கட்சி தலைவர் என்ன கூறுகிறார்களோ, அது தான் எங்களின் நிலைப்பாடு. புவனேஸ்வரி தாயை அவமதித்த பானு முஷ்டாக், தசராவை துவக்கி வைக்கலாமா, வேண்டாமா என்பதை மைசூரு மக்களே முடிவு செய்யட்டும்.
துணை முதல்வர் சிவகுமாரிடம் இருந்து மத பாடம் கற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சிவனின் கபாலி மலையை, இயேசு மலையாக மாற்ற முயற்சித்தவர் சிவகுமார்.
சித்தராமையாவின் உத்தி, இங்குள்ள காங்கிரஸ் முட்டாள்களுக்கு தெரிவதில்லை. தன் பின்னால் முஸ்லிம்களை வைத்து கொள்வதற்காகவே, பானு முஷ்டாக்கிற்கு முதல்வர் அழைப்பு விடுத்து உள்ளார்.
நாளையே அவரின் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தால், முஸ்லிம்களின் பலத்தை வைத்து, தன் பதவியை காத்துக் கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.