/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பயணியர் பாதுகாப்புக்கு தடுப்புகள் அமைப்பு
/
பயணியர் பாதுகாப்புக்கு தடுப்புகள் அமைப்பு
ADDED : ஆக 20, 2025 11:46 PM

பெங்களூரு :ஆர்.வி., ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் பாதையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
ஆர்.வி., ரோடு முதல் பொம்மசந்திரா வரை பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை, மக்கள் பயன்பாட்டிற்கு கடந்த 11ம் தேதி துவங்கியது. ரயில் சேவை துவங்கிய நாளிலிருந்தே, அதிக எண்ணிக்கையில் பயணியர் பயணம் செய்து வருகின்றனர். ரயிலுக்கு காத்திருக்கும் பயணியர்கள், ரயில் வரும் நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தண்டவாளத்துக்கு அருகில் போடப்பட்டுள்ள மஞ்சள் கோட்டை தாண்டி நிற்கின்றனர்.
இதனால், சிலர் தண்டவாளங்களில் விழும், ரயி ல் மீது மோதும் சூழல் ஏற்பட்டது. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் என பெங்களூரு தெற்கு எம்.பி., தேஜஸ்வி சூர்யா, நம்ம மெட்ரோ ரயிலின் நிர்வாக இயக்குநர் ரவிசங்கருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், நேற்று தண்டவாளத்துக்கு அருகில் உள்ள மஞ்சள் கோடுகளுக்கு முன், தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதற்கு பயணியர் பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். எம்.பி., தேஜஸ்வி சூர்யாவும் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
10 லட்சம் ஆர்.வி., ரோடு முதல் பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் சேவை துவங்கியதும், ஒரு நாளைக்கு சராசரியாக மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணியர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.