ADDED : ஏப் 21, 2026 02:46 AM

அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயல் தாலுகா அலுவலகத்திலும், தங்கவயல் மாவட்ட போலீஸ் அலுவலகத்திலும் நேற்று பசவ ஜெயந்தி விழா நடந்தது.
தாலுகா அலுவலகத்தில், அரசு விழாவாக நடத்தப்பட்டது. தாசில்தார் பாரத் தலைமை வகித்தார். பசவண்ணர் படத்துக்கு பூஜைகள் நடந்தன. பலரும் மலர் துாவி வணங்கினர். அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
ஏற்ற தாழ்வற்ற சமத்துவம் விரும்பிய பசவண்ணர் கொள்கை குறித்து பலரும் பெருமைப் பட விளக்கினர்.
சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில், பசவண்ணர் படத்துக்கு பூஜைகள் செய்தனர். போலீஸ் டி.எஸ்.பி., லட்சுமையா உட்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.
