தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பசவகல்யாண் பா.ஜ., - எம்.எல்.ஏ.,  சரணு சலகருக்கு 'பிடிவாரன்ட்' 

 பசவகல்யாண் பா.ஜ., - எம்.எல்.ஏ.,  சரணு சலகருக்கு 'பிடிவாரன்ட்' 

 பசவகல்யாண் பா.ஜ., - எம்.எல்.ஏ.,  சரணு சலகருக்கு 'பிடிவாரன்ட்' 


ADDED : ஜூன் 06, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 11:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பசுவதை நடப்பதாக கூறி, முஸ்லிம் ஒருவர் வீட்டிற்கு சென்று பிரச்னை செய்த வழக்கில், பசவகல்யாண் பா.ஜ., - எம்.எல்.ஏ., சரணு சலகருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீதரின் பசவகல்யாண் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரணு சலகர். இவர், கடந்த, 2023ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று, தனது தொகுதியில் உள்ள முஸ்லிம் ஒருவரின் வீட்டிற்கு சென்று, அந்த வீட்டில் பசுவதை நடப்பதாக கூறி பிரச்னை செய்தார். ஆனால் அங்கு எதுவும் நடக்கவில்லை.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில், சரணு சலகர் மீது வழக்கு பதிவானது. பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையும் நடந்து வருகிறது.

ஆனால், சரணு சலகர் ஒரு முறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போதும் அவர் வராததால் கடுப்பான நீதிபதி, சரணு சலகருக்கு எதிராக ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us