சிண்டிகேட் உறுப்பினர் பதவி பசவராஜ் கன்னாலே நீக்கம்
சிண்டிகேட் உறுப்பினர் பதவி பசவராஜ் கன்னாலே நீக்கம்
UPDATED : அக் 26, 2026 12:00 AM
ADDED : அக் 25, 2026 07:54 PM

துமகூரு: பீதர் மாவட்டம், பால்கியை சேர்ந்தவர் பசவராஜ் கன்னாலே, 45. பா.ஜ., பிரமுகரான இவர், துமகூரு பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்தார்.
கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவர் சிறையில் உள்ளார்.
தொழிலதிபரான பசவராஜ் கன்னாலே, சமூக சேவையிலும் ஈடுபட்டதால் அவரை கவுரவிக்கும் வகையில், துமகூரு பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக அவரை, முந்தைய கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேரடியாக நியமித்து இருந்தார்.
ஆனால், தேர்வு முறைகேடில் பசவராஜ் கன்னாலே கைது செய்யப்பட்டு இருப்பதால், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதை ஏற்றுகொண்ட கவர்னர் சுதா யாதவ், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து பசவராஜ் கன்னாலேயை, நேற்று நீக்கினார்.
