தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/புறவழிச்சாலை அமைக்க கோரி பிச்சை எடுத்த பொதுமக்கள்

புறவழிச்சாலை அமைக்க கோரி பிச்சை எடுத்த பொதுமக்கள்

புறவழிச்சாலை அமைக்க கோரி பிச்சை எடுத்த பொதுமக்கள்


UPDATED : அக் 26, 2026 12:00 AM

ADDED : அக் 25, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:00 AM ADDED : அக் 25, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ககலிபுரா: ககலிபுராவில் புறவழிச்சாலை அமைக் க கோரி, பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய பொதுமக்கள், கவனம் ஈர்த் துள்ளனர்.

பெங்களூரில் இருந்து கனகபுரா சாலை வழியாக, தமிழகத்தின் கோவைக்கு தேசிய நெடுஞ்சாலை 948 செல்கிறது. இந்த வழித்தடத்தில் உள்ள ககலிபுரா என்ற ஊரில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது. அங்கு, நான்கு வழி சாலை அமைக்கும் பணி மந்த கதியில் நடக்கிறது.

விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், ககலிபுராவில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்களும், விவசாயிகளும் பல மாதங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அரசு கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள், தேசிய நெடு ஞ்சாலை ஆணையத்தை கண்டித்து, ககலிபுரா டவுனில் விவசாயிகள், பொதுமக்கள் நேற்று நுாதன போராட்டம் நடத்தினர்.

சாக்கு பையில் செய்யப்பட்ட சட்டை அணிந்து, கையில் தட்டு ஏந்தி கடை, கடையாக சென்று பிச்சை எடுத்து, அரசுகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘ககலிபுராவில் புறவழிச்சாலை அமைக்க அரசுகளிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். இதனால் தான் பிச்சை எடுத்து, அரசுகளுக்கு பணம் அனுப்ப உள்ளோம்.

‘முதல்வர் சிவகுமார் தன் சொந்த ஊரான கனகபுராவுக்கு இந்த வழியாக தான் செல்கிறார். இப்பகுதியில் நடக்கும் விபத்துகளை அவர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us