மாற்றுத்திறனாளி இல்லத்திற்கு அரிசி வழங்க உத்தரவு திருடர்களுக்கு நுாதன தண்டனை
மாற்றுத்திறனாளி இல்லத்திற்கு அரிசி வழங்க உத்தரவு திருடர்களுக்கு நுாதன தண்டனை
UPDATED : அக் 26, 2026 12:00 AM
ADDED : அக் 25, 2026 07:54 PM
கோலார்: திருட்டு வழக்கில் இருவருக்கு, மாலுார் நீதிமன்றம் நுாதன தண்டனை விதித்துள்ளது.
கோலார் மாவட்டம், மாலுார் தொழிற்பகுதியில் உள்ள, என்.பி.ஆர்., தொழிற்சாலையில், ஆகஸ்ட் 14ம் தேதியன்று, விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயின.
இதுகுறித்து, தொழிற்சாலை உரிமையாளர், மாலுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணை நடத்தி, தமிழகத்தின் சங்கம் மற்றும் வீராசாமி ஆகியோரை கைது செய்தனர். விசாரணை, மாலுாரின் இரண்டாவது ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் நடந்தது.
நீதிமன்ற விசாரணையில் அரசு தரப்பில் வாதிட்ட வக்கீல் ரூபா, திருட்டு குற்றத்தை செய்தவர்களை தண்டிப்பதுடன், சமூக சேவை செய்யும் தண்டனை விதிக்கும்படி, வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நிதீன் குவெல்லோ, '‘குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு மனமாறுதல் ஏற்பட வேண்டும்,’' என்றார்.
பின், குற்றவாளிகள் சங்கர் மற்றும் வீராசாமி ஆகியோருக்கு, ‘‘மாலுாரின் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கு, 25 கிலோ கொண்ட மூன்று மூட்டைகள் அரிசி வழங்க வேண்டும்,’’ என, உத்தரவிட்டார்.
