தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நுாலகத்தில் மட்டுமே படித்து ஐ.எப்.எஸ்., தேர்வில் முதலிடம் பிடித்த பசவராஜ் கெம்பாவத் 

 நுாலகத்தில் மட்டுமே படித்து ஐ.எப்.எஸ்., தேர்வில் முதலிடம் பிடித்த பசவராஜ் கெம்பாவத் 

 நுாலகத்தில் மட்டுமே படித்து ஐ.எப்.எஸ்., தேர்வில் முதலிடம் பிடித்த பசவராஜ் கெம்பாவத் 


ADDED : மே 09, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 11:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.எப்.எஸ்., எனும் இந்திய வன சேவை அதிகாரி பதவிக்கு, கடந்த ஆண்டு தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த தேர்வில், நாட்டிலேயே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் பசவராஜ் கெம்பாவத், 25. இவர், கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விஷயம்.

தேர்வில் முதலிடம் பிடித்தது பற்றி, பசவராஜ் கெம்பாவத் கூறியதாவது:

எனது சொந்த ஊர் பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகா அலக்வாடி கிராமம். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை எனது ஊரில் உள்ள மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில் படித்தேன்.

பாகல்கோட்டின் ஜமகண்டியில், பி.யு., படித்த பின், உத்தர கன்னடா சிர்சியில் உள்ள கல்லுாரியில் வனவியலில் துறையில் இளங்கலை பட்டம் முடித்தேன்.

ஐ.எப்.எஸ்., அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், அதற்கான முயற்சியில் இறங்கினேன்.

படிப்பதற்காக பயிற்சி மையத்தில் சேர கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

படிப்பு திறனை மேம்படுத்தி கொள்ள, பெங்களூரு தான் சிறந்த இடம் என்று கருதி இங்கு வந்தேன்.

இங்கு அறை எடுத்து தங்கி, தினமும் நுாலகத்திற்கு தவறாமல் சென்றேன். புத்தகங்களில் இருந்து குறிப்பு எடுத்து சுயமாகவே படித்தேன்.

ஏற்கனவே ஒரு முறை தேர்வு எழுதி தோற்று உள்ளேன். ஆனால் மனம் தளராமல், முந்தைய தேர்வில் செய்த தவறுகளை திருத்தி, முறையாக திட்டமிட்டு படித்ததால் இரண்டாவது தேர்விலேயே சாதிக்க முடிந்தது.

நாட்டில் முதலிடம் பிடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

காடுகளை பாதுகாக்க வேண்டும் என்பது எனது முதன்மையான குறிக்கோள். ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது. அதற்கும் முயற்சி செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பசவராஜ் சகோதரர் சித்து கெம்பாவத், மைசூரு நகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us