/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'முதல்வரின் ஊழல் தெரியாத அப்பாவி பசவராஜ் ராயரெட்டி'
/
'முதல்வரின் ஊழல் தெரியாத அப்பாவி பசவராஜ் ராயரெட்டி'
'முதல்வரின் ஊழல் தெரியாத அப்பாவி பசவராஜ் ராயரெட்டி'
'முதல்வரின் ஊழல் தெரியாத அப்பாவி பசவராஜ் ராயரெட்டி'
ADDED : ஏப் 23, 2025 06:58 AM

பெங்களூரு : ''ஊழலில் விஷயத்தில் பசவராஜ் ராயரெட்டி, திடீரென, 'யு டர்ன்' அடித்திருப்பதை பார்த்து, காந்தியின் 'சத்யமேவ ஜெயதே' என்பவதை அவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர் என்பது தெரிகிறது' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
'ஊழலில் நாட்டிலேயே நம்பர் 1 மாநிலமாக கர்நாடகா உள்ளது' என, முதல்வர் சித்தராமையாவின் அரசியல் ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி கூறியிருந்தார். பின், 'என் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது' என, பல்டி அடித்தார்.
இதுதொடர்பாக பெங்களூரில் நேற்று மத்திய அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டி:
பசவராஜ் ராயரெட்டி, தன் பேச்சில் பின்வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை தான் பேசி உள்ளார். அவரின் பேச்சில் இருந்து காந்தியின் பொன் மொழியான, 'சத்யமேவ ஜெயதே' கோஷத்தை, காங்கிரசார் எவ்வாறு பின்பற்றுகின்றனர் என்பது தெரிகிறது.
ஒப்பந்தத்தில், கமிஷன், சதவீதம் முறைகேடு, மாநிலத்தில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது நடந்ததே தவிர, ம.ஜ.த., ஆட்சியில் நடக்கவில்லை.
நான் முதல்வராக இருந்தபோது, கான்ட்ராக்டர்களுக்கு சரியான நேரத்தில் தொகை விடுவிக்கப்பட்டு வந்தது; தாமதம் ஏற்படவே இல்லை. மேலும், என் ஆட்சி காலத்தில் கமிஷன் முறைகேடு, விதான் சவுதா வாசலை தொட்டதில்லை என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.
'ஊழலுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார்' என, ராயரெட்டி கூறியதில் இருந்து, அவர் எவ்வளவு பயத்தில் உள்ளார் என்பது தெரிகிறது.
முதல்வர் சித்தராமையாவின் தொடர் ஊழல் குறித்து தெரியாத அப்பாவியாக ராயரெட்டி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

