தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பளு துாக்கும் போட்டியில் தங்கம் வென்ற பாசில்

பளு துாக்கும் போட்டியில் தங்கம் வென்ற பாசில்

பளு துாக்கும் போட்டியில் தங்கம் வென்ற பாசில்


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

கேரளாவில் நடந்த பளு துாக்கும் போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற பாசில், கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு, ‘ பெஸ்ட் லிப்டர்’ என்ற விருதும் கிடைத்துள்ளது.

சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின், ஜெயில் சாலையில் வசிக்கும் முகமதுவின் இரண்டாவது மகன் பாசில், 20. இவர், பளு துாக்கும் போட்டிகளில் சாம்பியன். பல விருதுகளை வென்றவர்.

கடந்த 2025ம் ஆண்டில் மங்களூரில் நடந்த கர்நாடக சீனியர், ஜூனியர், சப் – ஜூனியர் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பாசில், 59 கிலோ பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.

அப்போது, ஷிவமொக்கா மாவட்டத்தின் சார்பில் விளையாடிய பாசில், 550 கிலோ பளுவை துாக்கி, மாநில அளவில் தன் திறமையை நிரூபித்தார். இந்த வெற்றி தென்னக அளவிலும் தொடர்கிறது.

கேரள மாநிலம், கண்ணுாரின் முன்டயாட் உள்விளையாட்டு அரங்கில், நவம்பர் 1 முதல் 4ம் தேதி வரை நடந்த பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், பாசில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமின்றி, தென்னகத்தின் சிறந்த பளு துாக்கும் வீரர் என்ற விருதும், அவருக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம், கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பாசில் பளு துாக்குவதில், பல சாதனைகள் செய்வதுடன், தன்னை போல விளையாட்டு சாதனையாளர்களை உருவாக்கும் நோக்கில், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். தன் அனுபவத்தை, அவர் பலருக்கும் கற்றுக் கொடுக்கிறார். வரும் நாட்களில் இவர் தேசிய, சர்வதேச அளவிலும் சாதனை செய்ய வேண்டும் என்பது, பாசிலின் குடும்பத்தினர், மாவட்ட விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us