தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/3 மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர் மாற்ற மத்திய அரசு ஒப்புதல்

3 மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர் மாற்ற மத்திய அரசு ஒப்புதல்

3 மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர் மாற்ற மத்திய அரசு ஒப்புதல்


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 07:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 07:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மெட்ரோ ரயில் ‘பிங்க்’ வழித்தடத்தில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரு காலேன அக்ரஹாரா – தாவரகெரே வரையிலான, 7.50 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில், ‘பிங்க்’ வழித்தடத்தில் ரயில் சேவையை இன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.

இந்த வழித்தடத்தில், 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், சில ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்றி, உள்ளூர் பகுதியின் பெயர்களை சூட்ட வேண்டும் என மத்திய அரசிடம், மாநில அரசு கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்றுவதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

அதன்படி, ஐ.ஐ.எம்.பி., ரயில் நிலையத்தின் பெயர் பிலேகஹள்ளி – ஐ.ஐ.எம்.பி., எனவும், ஜே.பி., நகர் 4வது கட்டம் ரயில் நிலையத்தின் பெயர் என்.எஸ்.பாளையா – ஜே.பி., நகர் 4வது கட்டம் எனவும், தாவரகெரே ரயில் நிலையத்தின் பெயர் எஸ்.ஜி., பாளையா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us