/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு பிரியங்க் கார்கேவுக்கு ப.சி., 'அட்வைஸ்'
/
அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு பிரியங்க் கார்கேவுக்கு ப.சி., 'அட்வைஸ்'
அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு பிரியங்க் கார்கேவுக்கு ப.சி., 'அட்வைஸ்'
அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு பிரியங்க் கார்கேவுக்கு ப.சி., 'அட்வைஸ்'
ADDED : ஜூன் 20, 2025 11:16 PM

'அமெரிக்கா செல்வதற்கு அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு அனுமதி அளிக்காதது குறித்து மத்திய அரசு சரியான விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் நீதிமன்றத்தை நாடலாம்' என, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் நடந்த விமான கண்காட்சியை பார்ப்பதற்காக, கர்நாடக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே சென்றார்.
அங்கிருந்து அமெரிக்காவில் நடக்கும் சர்வதேச உயிரியல் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டார். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவர் நேற்று முன்தினம் விமானம் மூலம் பெங்களூரு திரும்பினார். அப்போது தன்னை அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதிக்கவில்லையென, அவர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து வெளியு றவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி உள் ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சிதம்பரம் நேற்று, தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
கர்நாடக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே, அமெரிக்கா செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மத்திய அரசு உடனடியாக சரியான விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விளக்கம், திருப்திகரமாக இல்லையெனில், கார்கே நீதிமன்றத்தை நாடலாம். பயணம் செய்வது, பேச்சு சுதந்திரம் என்பவை ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகள். ஆனால், மத்திய அரசு அடிக்கடி மறந்துவிடுகிறது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- நமது நிருபர் -