/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பசவராஜ் பொம்மை மீது பி.சி.பாட்டீல் அதிருப்தி
/
பசவராஜ் பொம்மை மீது பி.சி.பாட்டீல் அதிருப்தி
ADDED : ஜூலை 30, 2025 08:55 AM

ஹாவேரி :  “பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மையை சந்திப்பதே கடினமாக உள்ளது,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் பி.சி.பாட்டீல் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஹாவேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஷிவமொக் கா பத்ராவதியில் புதிதாக சுற்றுலா தலத்தை, எம்.பி., ராகவேந்திரா உருவாக்கி உள்ளார். ஹாவேரியிலும் புதிய சுற்றுலா தலம் உருவாக்குவது குறித்து, எங்கள் கட்சியின் ஹாவேரி எம்.பி., பசவராஜ் பொம்மையிடம், சமீபத்தில் ஹாவேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியி ல் விவாதித்தேன். 'விரிவாக பேசலாம். டில்லிக்கு வாருங்கள்' என கூறிவிட்டுச் சென்றார்.
கடந்த 22ம் தேதி டில்லிக்கு சென்றேன். பசவராஜ் பொம்மை மொபைல் போனுக்கு அழைத்தேன். அவர் எடுக்கவில்லை. அவரது உதவியாளருக்கு போன் செய்தேன். எம்.பி., இன்னொரு காரில் சென்று கொண்டு இருப்பதாக கூறினார். சிறிது நேரம் கழித்து அழைத்தபோது பசவராஜ் பொம்மையும், அவரது உதவியாளரும் போனை எடுக்கவில்லை.
இதனால், எம்.பி., ராகவேந்திரா, ம த்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா ஆகியோரை சந்தித்தேன். கர்நாடக பவனுக்கு சென்றேன். அங்கு இருந்த சித்தராமையாவும், சில காங் கிரஸ் எம்.பி.,க்களையும் சந்தித்துப் பேசினேன்.
ஆனால் கடைசி வரை பசவராஜ் பொம்மையை சந்திக்கவே முடியவில்லை. அவரை சந்திப்பதே கடினமாக உள்ளது. அவர் பெரிய மனிதர் ஆகிவிட்டார். அவரும், அவரது தந்தையும் முதல்வராக இருந்தவர்கள். என்னை போன்ற கட்சியின் சாதாரண தொண்டருக்கு, பசவராஜ் பொம்மையிடம் இருந்து சரியான பதில் கிடைக்காதது வருத்தமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

