/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெளிநாட்டு அழைப்பு மோசடி பி.இ., பட்டதாரி வாலிபர் கைது
/
வெளிநாட்டு அழைப்பு மோசடி பி.இ., பட்டதாரி வாலிபர் கைது
வெளிநாட்டு அழைப்பு மோசடி பி.இ., பட்டதாரி வாலிபர் கைது
வெளிநாட்டு அழைப்பு மோசடி பி.இ., பட்டதாரி வாலிபர் கைது
ADDED : ஆக 13, 2025 04:35 AM
பெங்களூரு: வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி, கர்நாடக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுத்திய வழக்கில், பி.இ., பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு ஒயிட்பீட்டில் உள்ள, 'அயர்ன் மவுண்டன் கிளிம் சர்வீஸ்' என்ற பெயரில் செயல்படும் நிறுவனம், வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி, கர்நாடக அரசுக்கு பல கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக, ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீசில் வோடபோன் நிறுவனம் சார்பில் புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கில் துபைல் அகமது, 37 என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரை நிறுவனத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்திய போது, ஆறு சிம் கார்டு பாக்ஸ்கள், 133 சிம் கார்டுகள், 12 தரவு சேமிப்புகள், ஒரு நெட்வொர்க் ரூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய் ஆகும்.
வெளிநாட்டில் இருந்து இருவர் கூறியதன்படி, வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியதாக துபைல் அகமது ஒப்பு கொண்டு உள்ளார். அவர்கள் இருவரையும் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.