தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குடிநீர், மின்சார பற்றாக்குறை ஏற்படலாம் மனதளவில் தயாராக இருக்கவும்: சிவகுமார்

 குடிநீர், மின்சார பற்றாக்குறை ஏற்படலாம் மனதளவில் தயாராக இருக்கவும்: சிவகுமார்

 குடிநீர், மின்சார பற்றாக்குறை ஏற்படலாம் மனதளவில் தயாராக இருக்கவும்: சிவகுமார்


ADDED : செப் 16, 2026 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 12:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கர்நாடகாவில் குடிநீர் மற்றும் மின்சார பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்,'' என முதல்வர் சிவகுமார் கூறினார்.

பெங்களூரு கே.ஆர்., சதுக்கத்தில், கர்நாடக பொறியாளர் சங்கம் நடத்திய தேசிய பொறியாளர் தின கொண்டாட்டத்தில் முதல்வர் சிவகுமார் பங்கேற்றார். அப்போது, விஸ்வேஸ்வரய்யா சிலைக்கு மாலை அணிவித்து, சிவகுமார் மரியாதை செலுத்தினார்.

அவர் அளித்த பேட்டி:

கர்நாடகாவில் மழைப்பொழிவு மிகவும் குறைந்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை.

இதுபோன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம். மாநில நலனில் காங்கிரஸ் அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது.

அரசியல் ரீதியாக பிரச்னைகளை ஏற்படுத்த வேண்டாம். எதிர்க்கட்சியினர் போராட்டங்கள் என்ற போர்வையில் மக்களை பீதியடைய செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு உதவ மாநில அரசு தயாராக இருக்கிறது.

வறட்சி குறித்த ஆய்வுகள் சில பகுதிகளில் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பகுதிகளில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வானிலை ஆய்வு மையம் ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் என கணித்தது. ஆனால், சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது. அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

பொறியாளர் தினம் மாநிலத்தில் மின்சார பிரச்னைகள் நிலவி வருகிறது. சீரான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன.

கர்நாடகாவில் குடிநீர், மின்சா ர பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.

வறட்சி, விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி துவங்குகிறது.

மங்களூரில் அமைச்சரவை கூட்டம் நடக்கும். இதையடுத்து, பல அறிவிப்புகள் வெளியாகும்.

மாநி லத்தின் வளர்ச்சிக்கு பொறியாளர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அடுத்த ஆண்டு முதல் கர்நாடகாவில் அதிகாரப்பூர்வமாக, பொறியாளர் தினம் கொண்டாடப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us