தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூருடன் 21 மாவட்டங்களை இணைக்கும் பீன்யா மேம்பாலம் நாளை முதல் 5 நாட்கள் மூடல்

 பெங்களூருடன் 21 மாவட்டங்களை இணைக்கும் பீன்யா மேம்பாலம் நாளை முதல் 5 நாட்கள் மூடல்

 பெங்களூருடன் 21 மாவட்டங்களை இணைக்கும் பீன்யா மேம்பாலம் நாளை முதல் 5 நாட்கள் மூடல்


ADDED : ஏப் 12, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீன்யா: பெங்களூருடன், 21 மாவட்டங்களை இணைக்கும், பீன்யா மேம்பாலத்தில் இறுதி கட்ட சோதனைகள் எதிரொலியாக நாளை முதல், ஐந்து நாட்கள் முழுமையாக மூடப்படுகிறது.

பெங்களூரு நகரின் பீன்யா கென்னமேடல் பகுதியில் இருந்து, நாகசந்திரா பார்லே ஜி சுங்கச்சாவடி வரை, 4.20 கி.மீ., துார மேம்பாலம் செல்கிறது. இந்த மேம்பாலம் பெங்களூருடன் துமகூரு, சிக்கமகளூரு, ஷிவமொக்கா, பாகல்கோட், பல்லாரி, சித்ரதுர்கா உட்பட 21 மாவட்டங்களை இணைக்கிறது. தினமும் இந்த மேம்பாலத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

கடந்த, 2021 டிசம்பரில் மேம்பாலத்தின் இரண்டு துாண்களுக்கு இடையிலான கேபிள்களில் விரிசல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனால், விரிசல்களை சரி செய்வதற்காக மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்டிருந்த கேபிள்கள் உட்பட, மேலும் சில கேபிள்களை மாற்றும் பணிகள் நடந்தன.

இலகுரக வாகனம் அதன்பின், 2023 மார்ச் முதல் மேம்பாலத்தில், இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பின், பல கட்ட சோதனைகளை தொடர்ந்து, 2024 ஜூலை மாதம் 29 ம் தேதியில் இருந்து, கனரக வாகனங்கள் செல்லவும் அனுமதி கிடைத்தது.

இருந்தாலும் மேம்பால கேபிள்களை, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். தற்போது, அனைத்து கேபிள்களும் புதிதாக மாற்றப்பட்டு உள்ள நிலையில், மேம்பாலத்தில் இறுதி கட்ட சோதனைகள் நடத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதனால், நாளை காலை 5:00 மணி முதல் 17ம் தேதி காலை 11:00 மணி வரை மேம்பாலம் மூடப்படுகிறது.

மாற்று பாதை துமகூரு, நெலமங்களா பகுதிகளில் இருந்து பெங்களூரு நகருக்குள் வரும் வாகனங்கள், சர்வீஸ் சாலையில் உள்ள எட்டாவது மைல், தாசரஹள்ளி, ஜாலஹள்ளி கிராஸ், பீன்யா போலீஸ் நிலைய சந்திப்பு, எஸ்.ஆர்.எஸ்., சந்திப்பு, கோரகுண்டேபாளையா வழியாக செல்ல வேண்டும். பெங்களூரில் இருந்து நெலமங்களா, துமகூரு செல்லும் வாகனங்கள் கோரகுண்டேபாளையாவில் இருந்து இணைப்பு சாலையில் சென்று பார்லே ஜி சுங்கச்சாவடி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் ஏறி கொள்ளலாம் என்று, பீன்யா போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு நகரில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில், துமகூரு சாலையும் ஒன்று. இந்த சாலையில் தான் பீன்யா மேம்பாலமும் அமைந்து உள்ளது.

இதற்கு முன் மேம்பாலத்தில் பணிகள் நடந்த போது, சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் சென்ற போது 5 கி.மீ., துாரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது. தற்போது அந்த நிலை மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us