/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'இந்திரா கிட்' தாமதம் பயனாளிகள் அதிருப்தி
/
'இந்திரா கிட்' தாமதம் பயனாளிகள் அதிருப்தி
ADDED : ஜன 09, 2026 06:34 AM
பெங்களூரு: அன்னபாக்யா திட்டத்தின் கீழ், 5 கிலோ அரிசிக்கு பதிலாக, ஏழை குடும்பங்களுக்கு சர்க்கரை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உட்பட, பல்வேறு பொருட்கள் அடங்கிய, 'இந்திரா கிட்' ஜனவரியில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துள்ளது.
புத்தாண்டு ஆரம்பத்தில் பொங்கல் பண்டிகையின் போது, கர்நாடகாவின் பி.பி.எல்., மற்றும் அந்த்யோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஐந்து கிலோ அரிசி வழங்கப்படும்.
மற்ற 5 கிலோ அரிசிக்கு பதிலாக, சர்க்கரை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு என, பல்வேறு பொருட்கள் அடங்கிய, 'இந்திரா கிட்' வழங்க, உணவுத்துறை திட்டமிட்டது. மக்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பது, அரசின் எண்ணமாக இருந்தது.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், 'இந்திரா கிட்'டுக்கு பதிலாக, தலா 5 கிலோ அரிசி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் பி.பி.எல்., கார்டுகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 26 லட்சத்து 15,815. பயனாளிகளின் எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 62,191. இவர்களுக்கு மாதந்தோறும் இந்திரா கிட் வழங்க, 509 கோடி ரூபாய் செலவாகும்.
இது அரசுக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்தும். இதை மனதில் கொண்டே, திட்டத்தை தள்ளி வைத்துள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதம், திட்டம் செயல்படுத்தப்படலாம் என, அதிகாரிகள் கூறுகின்றனர். அரசின் தாமதப்போக்கால் பயனாளிகளுக்கு அதிருப்தி அடைந்து உள்ளனர்.

