/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு - பெலகாவி புதிய 'வந்தே பாரத்' ரயில்
/
பெங்களூரு - பெலகாவி புதிய 'வந்தே பாரத்' ரயில்
ADDED : மே 01, 2025 05:27 AM
''பெங்களூரில் இருந்து தார்வாடுக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என மத்திய அமைச்சர் பிஹலாத் ஜோஷிக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடிதம் அனுப்பி உள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, நடப்பாண்டு பிப்., 10ம் தேதி மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கடிதம் எழுதியிருந்தார்.
இதில், கர்நாடகாவின் வட மாவட்ட பகுதி மக்கள் பயனடையும் வகையில், பெங்களூரில் இருந்து தார்வாட் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை, பெலகாவி வரை நீட்டிக்க வேண்டும்' என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து ஏப்., 28ம் தேதி பிரஹலாத் ஜோஷிக்கு அனுப்பிய கடிதத்தில், 'பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். தினமும் காலையில் பெலகாவியில் இருந்து பெங்களூருக்கு இந்த ரயில் புறப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பிரஹலாத் ஜோஷி நன்றி தெரிவித்துள்ளார்
- நமது நிருபர் -.