தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு - விசாகப்பட்டினம் புதிய வாராந்திர ரயில் இயக்கம்

 பெங்களூரு - விசாகப்பட்டினம் புதிய வாராந்திர ரயில் இயக்கம்

 பெங்களூரு - விசாகப்பட்டினம் புதிய வாராந்திர ரயில் இயக்கம்


ADDED : மே 07, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு - விசாகப்பட்டினம் இடையில், புதிதாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தென்மேற்கு ரயில்வே அறிக்கை:

கிழக்கு கடற்கரை ரயில்வே சார்பில் விசாகப்பட்டினத்தில் இருந்து, எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு புதிதாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி வரும் 10 ம் தேதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 3:20 மணிக்கு புறப்படும் ரயில் 18509, மறுநாள் மதியம் 1:50 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு வரும்.

மறுமார்க்கமாக திங்கட்கிழமைகளில் எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து மதியம் 3:50 மணிக்கு புறப்படும் ரயில் 18510, மறுநாள் மதியம் 1:30 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.

கே.ஆர்.புரம், பங்கார்பேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, ஏலுாரு, ராஜமுந்திரி, சாமல்கோட், எலமஞ்சிலி, அனகாபள்ளி, துவட்டா ரயில் நிலையங்களில் நிற்கும்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us