தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண் அதிகாரியை ஏமாற்றிய பெங்களூரு தொழிலதிபர் கைது

 பெண் அதிகாரியை ஏமாற்றிய பெங்களூரு தொழிலதிபர் கைது

 பெண் அதிகாரியை ஏமாற்றிய பெங்களூரு தொழிலதிபர் கைது


ADDED : ஏப் 06, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 04:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திராநகர்: திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றியதுடன், வீடியோ எடுத்து மிரட்டிய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு, இந்திரா நகரை சேர்ந்தவர் கிருபாளனி, 45; தொழிலதிபர். வெளிநாடுகளில் இருந்து மின்னணு பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்கிறார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன், கிருபாளனிக்கும், பெங்களூரு விமான நிலையத்தில் சுங்க துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். திருமணம் செய்வதாக கூறி பெண் அதிகாரியுடன், கிருபாளனி உல்லாசமாக இருந்தார். இதை, மொபைல் போனில் வீடியோவும் எடுத்து கொண்டார்.

திருமணம் பற்றி பெண் அதிகாரி பேசும் போது எல்லாம், ஏதாவது ஒரு காரணத்தை கூறி தள்ளி போட்டார். இரண்டு ஆண்டுக்கு முன், உன்னை திருமணம் செய்ய முடியாது என்று பெண் அதிகாரியிடம் கூறினார்.

இதுபற்றி வெளியே கூறினால் ஆபாச புகைப்படங்கள், வீடியோவை வெளியிடுவதாக மிரட்டினார்.

வெளிநாடுகளில் இருந்து வாங்கி வரும் மின்னணு பொருட்களுக்கு சுங்க வரி செலுத்தாமல் தப்பிக்க, பெண் அதிகாரியை பயன்படுத்தி கொண்டார். அதிகாரியை மனதளவிலும், உடல் அளவிலும் துன்புறுத்தி வந்தார்.

பொறுமை இழந்த அதிகாரி, கிருபாளனி மீது எலஹங்கா போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் இந்திராநகர் என்பதால், இந்திராநகருக்கு வழக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த கிருபாளனி நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் புலிகேசிநகர் உதவி போலீஸ் கமிஷனர் கீதா தலைமையில் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us