தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு -- சென்னை விரைவு சாலை பணி இந்த ஆண்டுக்குள் முடிவது சந்தேகமே

 பெங்களூரு -- சென்னை விரைவு சாலை பணி இந்த ஆண்டுக்குள் முடிவது சந்தேகமே

 பெங்களூரு -- சென்னை விரைவு சாலை பணி இந்த ஆண்டுக்குள் முடிவது சந்தேகமே


ADDED : ஜன 04, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 04:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு -- சென்னை விரைவு சாலை பணிகள், இந்த ஆண்டுக்குள் முடிவது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு தற்போது ரயிலில் சென்றால், ஆறு மணி நேரமாகும். பஸ்சில் சென்றால் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரமாகும். இரண்டு முக்கிய நகரங்களையும் இணைக்கும் வகையில், பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட்டில் இருந்து, தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் வரை, 262 கி.மீ., துாரத்திற்கு, 18,000 கோடி ரூபாய் செலவில், விரைவுச் சாலை அமைக்கும் பணி, 2018ல் துவங்கியது. இச்சாலை அமைந்தால் ஹொஸ்கோட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதுாருக்கு இரண்டே கால் மணி நேரத்தில் சென்று விடலாம்.

தங்கவயல் கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் என்று மூன்று மாநிலங்களை இணைக்கும் இந்த விரைவுச் சாலை, மாலுார், பங்கார்பேட், தங்கவயல், பேத்தமங்களா, வெங்கடகிரி கோட்டா, பலமநேர், பங்காருபலேம், சித்துார், ராணிபேட்டை, வாலாஜாபேட்டை, அரக்கோணம் வழியாக செல்கிறது.

கர்நாடகாவில் ஹொஸ்கோட்டில் இருந்து தங்கவயல் எல்லையான பேத்தமங்களா வரை, 71 கி.மீ., துாரத்திற்கு, சாலை வருகிறது.

இதில், தங்கவயல் பெமல் வரை, 63 கி.மீ., துாரத்திற்கு பணிகள் முடிந்து விட்டன. கர்நாடகாவில் இன்னும், 8 கி.மீ., துார பணிகள் மட்டுமே நிறைவு பெற வேண்டும். ஆனால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இன்னும் பணிகள் நிறைவு பெறவில்லை. மந்த கதியில் நடக்கின்றன.

20 பேர் பலி ஹொஸ்கோட்டில் இருந்து தங்கவயல் பெமல் வரை சாலை பணிகள் முடிந்துள்ளதால், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. சாலை பளபளப்பாகவும், அதிவேகமாகவும் செல்லும் வகையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்துகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த விபத்துகளில், 20 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 22 பேர் காயம் அடைந்தனர். தற்போது வேக வரம்புகள் எதுவும் இல்லை என்பதால், அடிக்கடி விபத்து நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

முன்னர் இருசக்கர வாகனங்களால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்ததால், தற்போது விரைவு சாலையில் பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், விபத்துக்கள் நடப்பது, தேசிய நெடுஞ்சாலை துறையினரை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளது. முழு பணிகளும் முடிந்தால் மட்டுமே வேக கட்டுப்பாடு நிர்ணயம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண் டு ஜூலைக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆந்திரா, தமிழகத்தில் பணிகள் மந்தகதியில் நடப்பதால், இந்த ஆண்டு பணிகள் நிறைவு பெறுமா என்பது சந்தேகமே.

- நமது நிருபர் -:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us