sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

யுகாதி, ரம்ஜான் பண்டிகைக்கு பெங்களூரு - சென்னை சிறப்பு ரயில்

/

யுகாதி, ரம்ஜான் பண்டிகைக்கு பெங்களூரு - சென்னை சிறப்பு ரயில்

யுகாதி, ரம்ஜான் பண்டிகைக்கு பெங்களூரு - சென்னை சிறப்பு ரயில்

யுகாதி, ரம்ஜான் பண்டிகைக்கு பெங்களூரு - சென்னை சிறப்பு ரயில்


ADDED : மார் 24, 2025 05:01 AM

Google News

ADDED : மார் 24, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'யுகாதி, ரம்ஜானை முன்னிட்டு, பெங்களூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன' என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

ரயில் எண்: 07319: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், 28 ம் தேதி காலை 8:05 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, அன்றைய தினம் மதியம் 2:40 மணிக்கு சென்னை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், ரயில் எண் 07320: சென்னை சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு சிறப்பு ரயில், 28 ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 3:40 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 10:50 மணிக்கு கே.எஸ்.ஆர்., பெங்களூரு வந்தடையும்.

இந்த ரயில்கள் யஷ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்கார்பேட், ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, சோழிங்கநல்லுார், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக செல்கிறது.

ரயில் எண் 06203: மைசூரு - கார்வார் சிறப்பு ரயில், மார்ச் 28 ம் தேதி மைசூரில் இருந்து இரவு 9:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4:15 மணிக்கு கார்வார் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் எண் 06204: கார்வார் - மைசூரு சிறப்பு ரயில், மார்ச் 29 ம் தேதி கார்வாரில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4:40 மணிக்கு மைசூரு சென்றடையும்.

இந்த ரயில்கள், மாண்டியா, கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், குனிகல், ஹாசன், சக்லேஸ்பூர், சுப்ரமண்யா சாலை, கபகபுத்துார், பன்ட்வால்.

சூரத்கல், முல்கி, உடுப்பி, பர்கூர், குந்தாபூர், பைந்துார், பட்கல், முருடேஸ்வர், ஹொன்னாவர், கும்டா, கோகர்ணா சாலை, அங்கோலா வழியாக செல்கிறது.

ரயில் எண் 06519: விஸ்வேஸ்வரய்யா முனையம் - கலபுரகி விரைவு ரயில், மார்ச் 28 ம் தேதி விஸ்வேஸ்வரய்யா முனையத்தில் இருந்து இரவு 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:40 மணிக்கு கலபுரகி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06520: கலபுரகி - விஸ்வேஸ்வரய்யா முனையம் விரைவு ரயில், மார்ச் 29 ம் கலபுரகியில் இருந்து காலை 9:35 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 8:00 மணிக்கு விஸ்வேஸ்வரய்யா முனையம் வந்தடைகிறது.

இந்த ரயில், எலஹங்கா, தர்மாவரம், அனந்த்பூர், குந்த்கோல், அதானி, மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூர், கிருஷ்ணா, யாத்கிர், சஹாபாத் வழியாக செல்கிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us