பெங்களூரு குடிநீர் வாரியத்துக்கு ஐ.எஸ்.ஓ., சர்வதேச சான்றிதழ்
பெங்களூரு குடிநீர் வாரியத்துக்கு ஐ.எஸ்.ஓ., சர்வதேச சான்றிதழ்
ADDED : ஏப் 18, 2026 05:59 AM

பெங்களூரு: பெரிய அளவிலான நீர் தேக்க நிலையங்களை சர்வதேச அளவில் பராமரிப்பதற்காக, பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துக்கு, ஐ.எஸ்.ஓ., சர்வதேச சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
துணை முதல்வர் சிவகுமாரின் தலைமையின் கீழ், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் பல சாதனைகளை புரிந்து வருகிறது. அவ்வகையில், மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.
டி.கே., ஹள்ளி, ஹரோஹள்ள, தட்டகுனி ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் உள்ள பெரிய நீர் தேக்க நிலையங்கள் சர்வதேச தரத்தில் பராமரிக்கப்பட்டு வருவதற்காக, பெங்களூரு குடிநீர் வாரியத்திற்கு,'பியூரோ வெரிடாஸ்' நிறுவனம் ஐ.எஸ்.ஓ., சர்வதேச சான்றிதழை தந்து உள்ளது. இச்சான்றிதழை நம் நாட்டில் முதல் முறையாக பெங்களூரு குடிநீர் வாரியமே பெற்று உள்ளது.
இச்சான்றிதழ் துணை முதல்வர் சிவகுமார், குடிநீர் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் மற்றும் பலர் முன்னிலையில் காவேரி பவனில் வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
