தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு கிழக்கு மாநகராட்சி பட்ஜெட்

 பெங்களூரு கிழக்கு மாநகராட்சி பட்ஜெட்

 பெங்களூரு கிழக்கு மாநகராட்சி பட்ஜெட்


ADDED : மார் 28, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வருவாய்  2026 - 27 நிதியாண்டில், 1,500 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இலக்கை அடைவதற்காக வரி உயர்த்தப்படாது.

 இதுவரை, நகரில் 1.30 லட்சம் சொத்துகளுக்கு இ - பட்டா வழங்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 3.20 லட்சம் சொத்துகளுக்கு இ - பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 அனைத்து சொத்துக்களும் இ - பட்டாக்களாக மாற்றப்படும். மக்கள், இ - பட்டாவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

 சொத்து வரியில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும். வரி செலுத்த தவறியவர்களை கண்டறிய செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்.

 பி - பட்டாவிலிருந்து, ஏ - பட்டா மாற்றிக்கொள்வதற்கு சிறப்பு பிரசாரம் கடந்த ஆண்டு முதலே நடக்கிறது. இதன் மூலம் கூடுதலாக 225 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும்.

------------------------விளம்பரம்  பெங்களூரு கிழக்கு மாநகராட்சி பகுதியில் விளம்பரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விளம்பரங்கள் செய்வதற்கு தகுதியான இடங்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.

 பஸ் நிறுத்தங்களில் விளம்பரங்கள் செய்ய அனுமதி உண்டு. இதன் மூலம், ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

 'ஸ்கை வாக்' எனும் நடைமட்ட மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளில் விளம்பரம் செய்ய அனுமதி உண்டு. இதன் மூலம், 68 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

 விளம்பர நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதன் மூலம் 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 தனியார் நிறுவனங்கள் நகரில் ஏற்கனவே வைத்துள்ள தங்கள் விளம்பர போர்டுகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம், 20 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us