/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நகர பூங்காக்களில் ஆண்டு முழுதும் 'பெங்களூரு ஹப்பா'
/
நகர பூங்காக்களில் ஆண்டு முழுதும் 'பெங்களூரு ஹப்பா'
நகர பூங்காக்களில் ஆண்டு முழுதும் 'பெங்களூரு ஹப்பா'
நகர பூங்காக்களில் ஆண்டு முழுதும் 'பெங்களூரு ஹப்பா'
ADDED : மார் 30, 2025 04:22 AM

பெங்களூரை 'அழகுப்படுத்த', பல்வேறு திட்டங்களின் கீழ், நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 2024 - 25ல், அலங்கார விளக்குகள் அமைக்க, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் நகரில் உள்ள சந்திப்புகளை மேம்படுத்தவும், பொது இடங்களை அழகுபடுத்தவும் 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கூடுதலாக நகரின் அழகை மேலும் அதிகரிக்கும் வகையில், 'ஸ்கை டெக்' கட்டுவதற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில் சுற்றுலாவை ஊக்குவிக்கவும், நகரின் அழகை காணவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும், வருவாயை அதிகரிக்கவும், நவீன வசதிகளை மேற்கொள்ளவும், நகரை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றவும், ஸ்கை டெக் கட்டப்பட உள்ளது. ஆட்சேபனைகள், பரிந்துரைகளுடன் இடத்தை அடையாளம் காண, பொது அறிவிப்பு வரவேற்கப்படுகிறது. கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.100 கோடி மிச்சம்
நகரின் கார்பனால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், உள்கட்டமைப்பு மாற்றப்படும். மின்சார கட்டணங்களுக்காக, 2024 - 25ல் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதை குறைக்க, பாரம்பரிய சோடியம், உலோக ஹாலைடு விளக்குகளுக்கு பதிலாக, எல்.இ.டி., தொழில்நுட்பமாக மாற்றப்பட்டது. இதனால் மின் கட்டணம் 300 கோடி ரூபாயில் இருந்து 200 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. இதன் மீதமான 100 கோடி ரூபாய், மின்சார உள்கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படும்.
கெம்பே கவுடா மேம்பாட்டு ஆணையம் சார்பில் 10 கோடி ரூபாயில், மாகடி கோட்டை மேம்படுத்தப்படும்.
பெங்களூரு ஹப்பா
பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தால், டாக்டர் சிவராம் காரந்த் லே - அவுட்டில், 50 ஏக்கரில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு வசதிகளை, மாநகராட்சி மக்கள் பயன்படுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். கலை, கலாசாரம், சமூக பங்கேற்பபை ஊக்குவிக்கவும், பொது இடங்களை மேம்படுத்த கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.
நகர மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல திட்டங்கள் எடுக்கப்பட உள்ளது. துடிப்பான சமூக உணர்வு, பொது மக்களின் ஈடுபாட்டை வளர்க்க, நகரில் உள்ள அனைத்து மாநகராட்சி பூங்காக்களிலும் ஆண்டு முழுதும் 'பெங்களூரு ஹப்பா' போன்ற கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் பூங்காக்கள் பொழுது போக்கு, சமூக தொடர்புகளின் துடிப்பான மையங்களாக மாறும்.
பெங்களூரு வடக்கில் உள்ள ஜக்கூரில் பல்நோக்கு விளையாட்டு வசதி மையத்தை நிர்மானிப்பதில், இளைஞர் சேவைகள், விளையாட்டு துறையின் முயற்சியை மாநகராட்சி ஆதரிக்கும்.
ரஸ்ஸல் மார்க்கெட், சீரமைப்பு, ஹலசூரு ஏரி, நீச்சல் குளம் மேம்பாடு, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானம் ஆகியவை மேம்படுத்தப்படும்.