/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு ஐ.டி., ஊழியரிடம் ரூ.44 லட்சம் சைபர் மோசடி
/
பெங்களூரு ஐ.டி., ஊழியரிடம் ரூ.44 லட்சம் சைபர் மோசடி
பெங்களூரு ஐ.டி., ஊழியரிடம் ரூ.44 லட்சம் சைபர் மோசடி
பெங்களூரு ஐ.டி., ஊழியரிடம் ரூ.44 லட்சம் சைபர் மோசடி
ADDED : செப் 27, 2025 04:58 AM
பெங்களூரு: பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் கிடைக்கும் என கூறி, ஐ.டி., ஊழியரிடம் 44 லட்சம் ரூபாய் சைபர் மோசடி நடந்துள்ளது.
பெங்களூரு, ஹொரமாவு பகுதியில் வசிப்பவர் ஜெயராஜ், 46. இவர் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூலை 11ம் தேதி, டெலிகிராம் செயலியில் ரீவா சவுஹான் என்ற நபரிடமிருந்து மெசேஜ் வந்துள்ளது.
அதில், 'தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனக்கு உதவி செய்ய வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்த ஜெயராஜ், 'நீங்கள் ஆள் மாற்றி மெசேஜ் செய்துள்ளீர்கள்' என பதில் அனுப்பினார். அதன்பின் இருவரும் பரஸ்பரம் 'மெசேஜ்' செய்து நண்பர்களாக ஆகினர். பின்னர், 'வாட்ஸாப்' எண்ணை பகிர்ந்து கொண்டு, வாட்ஸாப் கால் செய்தும் பேசினர்.
அப்போது, ரீவா, தன்னை பற்றி பேசும்போது, தான் ஷேர் மார்க்கெட் டிரேடிங் கம்பெனியில் வேலை செய்வதாக கூறினார். தன்னிடம் பணம் கொடுத்தால் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறினார்.
இதை நம்பிய ஜெயராஜ், ஜூலை 31ம் தேதி ரீவா, வாட்ஸாப்பில் அனுப்பிய டிரேடிங் செயலியை பதிவிறக்கம் செய்தார். அப்போதே, 50,000 ரூபாய் முதலீடும் செய்தார். அடுத்த சில நாட்களிலேயே ஜெயராஜுக்கு 4,950 ரூபாய் லாபம் கிடைத்தது.
இதனால், மகிழ்ச்சி அடைந்தவர், ஆகஸ்ட் 1 முதல் கடந்த 17ம் தேதி வரை, மூன்று வங்கிக் கணக்குகளிலிருந்து 44.20 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். 24 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்ததாக செயலியில் காண்பித்தது.
இந்த பணத்தை, தன் வங்கி கணக்கிற்கு மாற்ற அவர் முயற்சித்தார். ஆனால், அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. உடனடியாக, ரீவாவை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், அவரது எண், 'சுவிட்ச் ஆப்' எ ன வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதுகுறித்து 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கடந்த 22ம் தேதி சைபர் போலீசில் புகார் செய்தார். கிழக்கு சைபர், பொருளாதாரம், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.