தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூரு – மதுரை விமானம் திடீர் கோளாறால் பாதியில் நிறுத்தம்

பெங்களூரு – மதுரை விமானம் திடீர் கோளாறால் பாதியில் நிறுத்தம்

பெங்களூரு – மதுரை விமானம் திடீர் கோளாறால் பாதியில் நிறுத்தம்


UPDATED : நவ 17, 2026 12:00 AM

ADDED : நவ 16, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 12:00 AM ADDED : நவ 16, 2026 10:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவனஹள்ளி: பெங்களூரில் இருந்து மதுரை செல்ல இருந்த, ‘இண்டிகோ’ விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்ததால், ஓடுபாதையிலேயே விமானம் நிறுத்தப்பட்டது.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தமிழகத்தின் மதுரைக்கு 143 பயணியருடன் நேற்று காலை 7:20 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.

ஓடுதளத்தில் சென்று, மேலே எழும்புவதற்கு சில வினாடிகள் இருந்த போது, ஹைட்ராலிக் அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கான எச்சரிக்கை விளக்கு எரிந்தது.

சுதாரித்து கொண்ட விமானி, உடனடியாக அவசரகால பிரேக்கை பயன்படுத்தி, விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தினார்.

ஓடுபாதையில் விமானம் நின்றதால் பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்திற்குள் இருந்த ஊழியர்கள், பயணியரை பார்த்து தலையை குனிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதால், மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் ஓடுபாதையில் நின்றது குறித்து தகவல் அறிந்த, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்றனர். விமானத்திற்குள் இருந்த பயணியர் பத்திரமாக இறக்கப்பட்டு, முனையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மாற்று விமானத்தில் அவர்கள் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு அடைந்த விமானம், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஓடுபாதையில் இருந்து எழும்பி விமானம் மேலே பறக்கும் போது சக்கரங்களை உள்ளே இழுப்பதிலும், தரையிறங்கும் போது சக்கரங்களை வெளியே தள்ளுவதிலும், ‘ஹைட்ராலிக்’ அமைப்பு தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், விமானத்தை ஓடுபாதையில் நிறுத்திய விமானி, பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us