/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரே நாளில் 9,08,153 பேர் பயணம்: பெங்களூரு மெட்ரோ புது உச்சம்
/
ஒரே நாளில் 9,08,153 பேர் பயணம்: பெங்களூரு மெட்ரோ புது உச்சம்
ஒரே நாளில் 9,08,153 பேர் பயணம்: பெங்களூரு மெட்ரோ புது உச்சம்
ஒரே நாளில் 9,08,153 பேர் பயணம்: பெங்களூரு மெட்ரோ புது உச்சம்
ADDED : ஏப் 19, 2025 11:07 PM
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில்களில் ஒரே நாளில் அதிகபட்சமாக 9,08,153 பேர் பயணம் செய்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால், பணிக்கு செல்வோர் பலரும் மெட்ரோ ரயில்களையே நம்பி உள்ளனர்.
கடந்த பிப்ரவரியில் மெட்ரோ ரயில்களின் டிக்கெட் கட்டணம் 50 சதவீதம் வரை கடுமையாக உயர்த்தப்பட்டது. இதற்கு பயணியர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பிப்ரவரி, மார்ச்சில் மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்தது.
கட்டண உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என மாநில அரசும்; மாநில அரசு தான் காரணம் என, மத்திய அரசும் மாறி மாறி குறை கூறி வந்தன.
கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை முன்பு போல் வந்தது. பயணியரும் புதிய டிக்கெட் கட்டணத்துக்கு பழக்கிவிட்டனர்.
இந்நிலையில், பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் நேற்று தன் 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
பெங்களூரு மெட்ரோவில் 17ம் தேதி 9,08,153 பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பயணியர் பயணம் செய்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஒயிட்பீல்டில் இருந்து செல்லகட்டா வரை 4,35,516 பேரும்; மாதவராவில் இருந்து சில்க் இன்ஸ்டிடியூட் வரை 2,85,240 பேரும்; கெம்பேகவுடா நிலையத்தில் இருந்து 1,87,397 பேரும் பயணம் செய்துள்ளனர். இச்சாதனைக்கு காரணமான பயணியருக்கு மெட்ரோ நிர்வாகம் நன்றி தெரிவிக்கிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

