/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு மெட்ரோ ரயில் புதிய நிர்வாக இயக்குநர் நியமனம்
/
பெங்களூரு மெட்ரோ ரயில் புதிய நிர்வாக இயக்குநர் நியமனம்
பெங்களூரு மெட்ரோ ரயில் புதிய நிர்வாக இயக்குநர் நியமனம்
பெங்களூரு மெட்ரோ ரயில் புதிய நிர்வாக இயக்குநர் நியமனம்
ADDED : ஜூலை 19, 2025 10:57 PM

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவன புதிய நிர்வாக இயக்குநராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜெ.ரவிசங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 2024 ஜனவரியில் மஹேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
இவருக்கு கடந்த ஏப்ரலில் கூடுதல் பொறுப்பாக பெங்களூரு மாநகராட்சியின் தலைமை கமிஷனர் பதவியும் வழங்கப்பட்டது. இரண்டு முக்கியமான பொறுப்புகளையும் நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக, கர்நாடகா விவசாயத்துறையின் செயலராக பணியாற்றி வந்த ஜெ.ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை நேற்று முன்தினம் மாநில அரசு வெளியிட்டது. இவர், 2001 ஐ.ஏ.எஸ்., பேட்சை சேர்ந்தவர். வீட்டு வசதித் துறையில் செயலர், பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு கமிஷனர், ராய்ச்சூர் மாவட்ட கலெக்டர் என பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், நிர்வாக அதிகாரி துஷார் கிரிநாத் இருவரும் இணைந்து மெட்ரோ புதிய நிர்வாக இயக்குநர் ஜெ.ரவிசங்கருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.