/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துாய்மை இல்லை எனில் அபராதம்; பெங்களூரு மாநகராட்சி எச்சரிக்கை
/
துாய்மை இல்லை எனில் அபராதம்; பெங்களூரு மாநகராட்சி எச்சரிக்கை
துாய்மை இல்லை எனில் அபராதம்; பெங்களூரு மாநகராட்சி எச்சரிக்கை
துாய்மை இல்லை எனில் அபராதம்; பெங்களூரு மாநகராட்சி எச்சரிக்கை
ADDED : ஏப் 05, 2025 01:29 AM

பெங்களூரு: பெங்களூரில் வானிலை மாற்றம் காரணமாக, டெங்கு காய்ச்சல் ஏறுமுகமாக உள்ளது. மூன்று மாதங்களில் 329 பேருக்கு டெங்கு ஏற்பட்டது.
எனவே துாய்மையை கடைப்பிடிக்காதோருக்கு, அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியதாவது:
பெங்களூரில் டெங்கு பரவுகிறது. மூன்றே மாதங்களில் 329 பேருக்கு டெங்கு உறுதியானது.
துாய்மை இல்லாததே, நோய் அதிகரிக்க காரணம். வீடுகள், சாலைகள், சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே மழை பெய்கிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகரிக்கும். இதனால், டெங்கு பரவும் அபாயம் உள்ளது.
இதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
துாய்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். துாய்மையை பின்பற்றாதோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
டெங்குவை கட்டுப்படுத்த சுகாதார பிரிவு, தோட்டக்கலை பிரிவு, வனம், திடக்கழிவு, மழை நீர் கால்வாய், சாலை அடிப்படை வசதிகள் பிரிவுட், மண்டல வாரியாக ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும். எந்த பகுதியிலும் நீர் தேங்காமல் பார்த்து கொள்கிறோம்.
டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும்படி என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

