பெங்களூரு – சபரிமலை ‘ஏசி’ பஸ் கே.எஸ்.ஆர்.டி.சி., இயக்குகிறது
பெங்களூரு – சபரிமலை ‘ஏசி’ பஸ் கே.எஸ்.ஆர்.டி.சி., இயக்குகிறது
UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 11:19 PM
பெங்களூரு: அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, பெங்களூரில் இருந்து சபரிமலைக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., ‘ஏசி’ பஸ்சை இயக்குகிறது.
கர்நாடக பக்தர்கள் வசதிக்காக, கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில், பெங்களூரில் இருந்து சபரிமலை நிலக்கல் வரை ‘ஏசி’ பஸ் சேவை துவங்கியுள்ளது. அடுத்த மாதம் 15ம் தேதி வரை பஸ் இயக்கப்படுகிறது.
சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து மதியம் 1:50 மணிக்கு புறப்படும் பஸ், மைசூரு, கோழிக்கோடு, திருச்சூர், கோட்டயம், எருமேலி வழியாக மறுநாள் காலை 6:45 மணிக்கு நிலக்கல் சென்றடையும்.
அங்கிருந்து மாலை 6:00 மணிக்கு புறப்படும் பஸ் மறுநாள் காலை 7:15 மணிக்கு சாந்திநகர் வந்தடையும். பெங்களூரில் இருந்து நிலக்கல்லுக்கு ஒருவருக்கு 1,980 ரூபாயும், மைசூரில் இருந்து 1,880 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
