UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 11:19 PM
சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் நகரில், குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை நாயை வேட்டையாடியதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சிக்கபல்லாபூர் நகரின், வாபசந்திராவில் நேற்று அதிகாலை 2:45 மணியளவில், சிறுத்தை நுழைந்தது. இப்பகுதியில் 'மயுகா பேக்கரி' முன்பாக உள்ள கட்டடத்தின் படிகளில் ஏறி சென்றது.
கட்டடத்தின் மீது இருந்த நாயை வேட்டையாடிய சிறுத்தை, படிகளில் இறங்கி சென்றது. கட்டடம் மீது சிறுத்தை நடமாடியதை கண்டு, சுற்றுப்பகுதியில் நாய்கள் குறைத்தன.
சிறுத்தை படியேறி செல்வது, இறங்கும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதற்கு முன் சிக்கபல்லாபூரின், பல்வேறு கிராமங்களில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை, இப்போது நகர் பகுதியில் நுழைய துவங்கியுள்ளது. குறிப்பாக மக்கள் நெரிசல் மிகுந்த சாலையிலேயே நடமாடுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
