புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த பெங்களூரு குடிநீர் வாரியம் திட்டம்
புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த பெங்களூரு குடிநீர் வாரியம் திட்டம்
ADDED : ஜூன் 04, 2026 11:13 PM
பெங்களூரு: பெங்களூரின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர மேம்பாட்டுக்கு தகுந்த வசதியை ஏற்படுத்த, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம், பி - க்வின் எனும், 'பெங்களூரு குளோபல் வாட்டர் இன்னோவேஷன் நெட்ஒர்க்' திட்டத்தை செயல்படுத்த தயாராகிறது.
இது குறித்து, குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரு அதிவேகமாக வளர்ந்து வருகிறது. வருங்காலத்தில் மக்களுக்கு குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தொலை நோக்கு பார்வையுடன், புதிய தொழில்நுட்பங்களை பொருத்துகிறது. ஏ.ஐ., அடிப்படையிலான ஆய்வு, ஸ்மார்ட் மீட்டரிங் நடைமுறை கொண்டு வரப்படும்.
நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி, தண்ணீர் சுத்திகரிக்க வேண்டும். கல்வித்துறை, குடிநீர் வாரிய பிரதிநிதிகள், தொழில் சார்ந்த வல்லுநர்கள் ஒருங்கிணைந்து, குடிநீர் சுத்திகரிப்பு, தண்ணீர் மறு சுழற்சி தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வர் .
நகரம் முழுவதும் புதிய தொழில்நுட்பங்களை, பெரிய அளவில் பொருத்துவதற்கு முன், சோதனை முறையில் சிறிய அளவில் பொருத்தப்படும்.
இதனால் குடிநீர் வாரியத்தின் முதலீடு சுமை குறையும். உள்நாட்டு தொழில்நுட்பம் மட்டுமன்றி, வெளி நாடுகளின் தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குள் நுழைய, பெங்களூரு குடிநீர் வாரிய திட்டங்கள் வழி வகுக்கும்.
புதிய தொழில்நுட்பம் பயன்படுத்துவதால், குடிநீர் வாரியத்தின் செலவு குறையும். வருவாய் அதிகரிக்கும். குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, திறன் பயிற்சி அளிக்கப்படும்.
இதற்காக கோர்ஸ்கள், தொழில்நுட்ப பயிற்சிகள், மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படும். குடிநீர் வாரியம் வகுத்துள்ள புதிய திட்டங்களுக்கு, வெளிநாடுகளின் நிதி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் நிதியுதவி வழங்க முன் வந்துள்ளன. மாநில அரசும் நிதியுதவி வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
