ADDED : ஏப் 26, 2026 11:45 PM

காடுகோடி: ஓசூர் வெங்காய வியாபாரி கொலையில், பெங்களூரு வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
தமிழகத்தின் ஓசூரை சேர்ந்தவர் ராமசந்திர ரெட்டி, 45; வெங்காய வியாபாரி. ஓசூரில் இருந்து வெங்காயங்களை சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்து, பெங்களூரில் விற்பனை செய்து வந்தார். கடந்த 24ம் தேதி இரவு காடுகோடியில் உள்ள பட்டாலம்மன் கோவில் அருகில் படுத்து துாங்கினார்.
அப்போது, ராமசந்திர ரெட்டி தலையில், 'ஹாலோபிளாக்' கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம், ராமசந்திர ரெட்டியை கொலை செய்த ஹரிஷ், 32, என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது அம்பலமானது.
அதாவது, காடுகோடியில் வெங்காய வியாபாரம் செய்ய வந்த ராமசந்திர ரெட்டிக்கும், திருமணமான பெண்ணுக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டது. காடுகோடியில் வியாபாரம் செய்ய வரும் போது எல்லாம், அந்த பெண் வீட்டிற்கு ராமசந்திர ரெட்டி சென்று உள்ளார்.
இதற்கிடையில், அந்த பெண்ணிற்கும், அதே பகுதியை சேர்ந்த, ஹரிஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. தனது கள்ளக்காதலியுடன், ராமசந்திர ரெட்டி உறவில் இருப்பது ஹரிஷுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை தீர்த்து கட்ட நினைத்தார். சரியான நேரத்தை எதிர்பார்த்து இருந்தார்.
இதன்படி, கோவில் முன்பு ராமசந்திர ரெட்டி துாங்கிய போ து, அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதில், அவரது கள்ளக்காதலிக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
