தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெஸ்காமின் 8 மாவட்டங்களுக்கு மின் பிரச்னை தீர உதவி எண் அறிவிப்பு

 பெஸ்காமின் 8 மாவட்டங்களுக்கு மின் பிரச்னை தீர உதவி எண் அறிவிப்பு

 பெஸ்காமின் 8 மாவட்டங்களுக்கு மின் பிரச்னை தீர உதவி எண் அறிவிப்பு


ADDED : மார் 04, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெஸ்காமுக்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களுக்கு மின் பிரச்னை உதவிக்கு, 11 வாட்ஸாப் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பெஸ்காம் என்ற பெங்களூரு மின் வினியோக நிறுவனம் சார்பில், பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர், கோலார், தாவணகெரே, துமகூரு, சித்ரதுர்கா, ராம்நகர் ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

இம்மாவட்டங்களில் மின் பிரச்னை உதவிக்கு, 1912 என்ற, 24 மணி நேர உதவி எண் ஏற்கனவே இயங்கி வருகிறது. தினமும் பல இடங்களில் இருந்தும் மின்சார பிரச்னை தொடர்பாக புகார்கள் வருவதால், சில நேரங்களில், '1912' பொதுமக்கள் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் வசதிக்காக, 11 வாட்ஸாப் உதவி எண்களை பெஸ்காம் அறிவித்து உள்ளது.

பெங்களூரு நகர மாவட்டத்துக்கு தெற்கு மண்டலம் 82778 84011, மேற்கு மண்டலம் 82778 84012; கிழக்கு மண்டலம் 82778 84013; வடக்கு மண்டலம் 82778 84014.

கோலாருக்கு 82778 84015; சிக்கபல்லாபூருக்கு 82778 84016; பெங்களூரு ரூரலுக்கு 82778 84017; ராம்நகருக்கு 82778 84018; துமகூருக்கு 82778 84019; சித்ரதுர்காவுக்கு 82778 84020; தாவணகெரேவுக்கு 82778 84021 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இனி பயனாளிகள் உங்கள் பகுத மின் பிரச்னை குறித்து புகைப்படம், வீடியோவாக இந்த எண்களுக்கு அனுப்பலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us