/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஸ்மார்ட் மீட்டருக்கு டெண்டர் பெஸ்காம், அரசுக்கு நோட்டீஸ்
/
ஸ்மார்ட் மீட்டருக்கு டெண்டர் பெஸ்காம், அரசுக்கு நோட்டீஸ்
ஸ்மார்ட் மீட்டருக்கு டெண்டர் பெஸ்காம், அரசுக்கு நோட்டீஸ்
ஸ்மார்ட் மீட்டருக்கு டெண்டர் பெஸ்காம், அரசுக்கு நோட்டீஸ்
ADDED : ஏப் 26, 2025 09:16 AM
பெங்களூரு : மின் பயன்பாடு குறித்து, தெளிவான தகவல் தெரிவிக்கும் ஸ்மார்ட் மீட்டர்களின் விலையில் வித்தியாசம் இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய மனு தொடர்பாக, மாநில அரசு, பெஸ்காமுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
பெங்களூரில் குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டடங்களில் சாதாரண மீட்டர்களை, ஸ்மார்ட் மீட்டராக பெஸ்காம் மாற்றுகிறது. ஸ்மார்ட் மீட்டர்களை சப்ளை செய்யும் டெண்டர், தாவணகெரேவின், ராஜஸ்ரீ எலக்ட்ரிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயித்த விலையை விட, பல மடங்கு அதிக விலை கொடுத்து, ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த டெண்டரை ரத்து செய்ய கோரி, அஸ்வராமானுஜா மீடியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ராமசந்திர அன்னகேரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் மதுசூதன், 'சிங்கிள் பேஸ் ஸ்மார்ட் மீட்டரின் விலை 2,461 ரூபாயாகும். டெண்டரில் 4,235 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. த்ரிபேஸ் ஸ்மார்ட் மீட்டரின் விலை 3,292 ரூபாயாகும். டெண்டரில் 7,525 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். இது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே டெண்டரை ரத்து செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
டெண்டருக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், இது குறித்து விளக்கம் கேட்டு மாநில அரசுக்கும், பெஸ்காமுக்கும் நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.