/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பிக்பாஸ்' பிரபலத்துக்கு கிடைத்தது ஜாமின்
/
'பிக்பாஸ்' பிரபலத்துக்கு கிடைத்தது ஜாமின்
ADDED : ஏப் 18, 2025 07:02 AM

பெங்களூரு: கன்னட 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்கள் வினய் கவுடா, ரஜத் கிஷன். இவர்கள், கத்தியுடன் 'ரீல்ஸ்' செய்ததால் கடந்த மாதம் 25ம் தேதி, பசவேஸ்வர நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், நிபந்தனையின்படி ரஜத் கிஷன் நடந்து கொள்ளவில்லை. இதனால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ரஜத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று பெங்களூரு 24வது கூடுதல் தலைமை ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது.
விசாரணையில், 'நீதிமன்ற உத்தரவை மீறக்கூடாது' என எச்சரித்து, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

