ADDED : ஆக 22, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: ஜாதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த 'பிக்பாஸ்' பிரபலம் வக்கீல் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வக்கீல் ஜெகதீஷ், சில நாட்களுக்கு முன், தன் சமூக வலைதள பக்கத்தில் ஜாதிகள் குறித்த ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது குறித்து, கொடகேஹள்ளி போலீசில், மஞ்சுநாத் புகார் அளித்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது, கதவை திறக்க மறுத்துவிட்டார்.
நேற்று மீண்டும் அவரது வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர்.