/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்திய 'பிக்பாஸ்' வீட்டுக்கு 'சீல்' போட்டியாளர்கள் அனைவரும் அதிரடியாக வெளியேற்றம்
/
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்திய 'பிக்பாஸ்' வீட்டுக்கு 'சீல்' போட்டியாளர்கள் அனைவரும் அதிரடியாக வெளியேற்றம்
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்திய 'பிக்பாஸ்' வீட்டுக்கு 'சீல்' போட்டியாளர்கள் அனைவரும் அதிரடியாக வெளியேற்றம்
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்திய 'பிக்பாஸ்' வீட்டுக்கு 'சீல்' போட்டியாளர்கள் அனைவரும் அதிரடியாக வெளியேற்றம்
ADDED : அக் 08, 2025 07:12 AM

பிடதி : சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி, 'பிக்பாஸ்' வீட்டுக்கு நேற்று தாசில்தார் முன்னிலையில், 'சீல்' வைக்கப்பட்டது. இதனால், நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கன்னட, 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 12வது சீசன் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. இதை கன்னட நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வந்தார்.
இதில் 11 ஆண்கள், 8 பெண்கள் என, 19 போட்டியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு கிடைந்த நிலையில், கலாசார சீரழிவை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதனால் 'பிக்பாஸ்' பெரும் சர்ச்சையில் சிக்கியது.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, பெங்களூரு தெற்கு மாவட்டம், பிடதி பகுதியில் நடக்கிறது. நிகழ்ச்சிக்காக, 'ஜாலிவுட் ஸ்டூடியோ'வில் வீடு போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் ஒரு நாளைக்கு 2.50 லட்சம் லிட்டர் நீர் உபயோகிக்கப்படுகிறது. இங்கு பயன்படுத்தப்படும் நீர் எவ்வித சுத்திகரிப்பும் செய்யப்படாமல், திறந்தவெளியில் வெளியிடப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றியுள்ள தொழில் பகுதிகளுக்கு ஆபத்து நிலவுகிறது.
நெருக்கடி அதுபோல, குப்பையும் தரம் பிரிக்காமல் கொட்டப்படுகிறது. குப்பையை தரம் பிரிக்கவும், கழிவுநீரை சுத்திகரிக்கவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிக்பாஸ் வீட்டை உடனடியாக மூட வேண்டும் என நேற்று முன்தினம் 'நோட்டீஸ்' அளித்தது.
பிக்பாஸ் வீட்டுக்கு மின்சாரம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என, பெஸ்காமிற்கும் அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., தாசில்தார் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து, நேற்று, வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக 2024 மார்ச் மாதமே 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. இருப்பினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமமே.
சட்டத்தை விட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. பிக்பாஸ் வீட்டை மூடுவது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கோர்ட்டுக்கு சென்றால், நாங்களும் பதில் அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தடை பெங்களூரு தெற்கு மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாஸ் கவுடா கூறுகையில், ''பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே நடக்கும் விளையாட்டுகள், நிகழ்ச்சிகளின்போது அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.
''இதை போலீசார் ஆய்வு செய்து என்.ஓ.சி., எனும் தடையில்லா சான்றிதழை வழங்குவர். ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்.ஓ.சி.,க்கு விண்ணப்பிக்கவில்லை. இதனால், அவர்களுக்கு சான்றிதழ்களும் கொடுக்கப்படவில்லை,'' என்றார்.
இதையடுத்து, பிக்பாஸ் வீட்டின் முன்பு, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 'வீட்டை உடனடியாக மூட வேண்டும்' என கோஷங்கள் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
நேற்று மாலை பிக்பாஸ் வீட்டுக்கு ராம்நகர் தாசில்தார் தேஜஸ்வினி வந்தார். அவருடன் போலீசார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வந்தனர். பரபரப்புக்கு இடையே தாசில்தார் முன்னிலையில் பிக்பாஸ் வீட்டின் கேட்டுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அனைவரும் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால், 12வது சீசன் ஒளிபரப்பாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.