ADDED : மார் 28, 2026 04:22 AM

சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் பிராண்ட் பெங்களூரு - ஆரோக்கியமான பெங்களூரு திட்டத்தின் கீழ், 7 மகப்பேறு மருத்துவமனைகள் 30 படுக்கைகள் கொண்ட சுகாதார மையமாக மாற்றப்படும். இதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு. போப்படி மருத்துவமனையில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்காக பகல்நேர பராமரிப்பு மையம் துவங்கப்படும்.
சென்ட்ரல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்திரா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
கோல்டன் ஹவர் முக்கியத்தை உணர்ந்து உயிர்காக்கும் திட்டமாக 'பைக் ஆம்புலன்ஸ் சேவை' திட்டம் துவங்க உள்ளோம்.
உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'சிறு கடை துாய உணவு' என்ற திட்டம் துவங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தெருவோர ஹோட்டல் வியாபாரிகளுக்கு பயிற்சி அளித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து சான்றிதழ் பெற்று தரப்படும்.
