/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஓலா, ஊபர ் ' செயலிகளில் பைக் டாக்சி சேவை நிறுத்தம்
/
'ஓலா, ஊபர ் ' செயலிகளில் பைக் டாக்சி சேவை நிறுத்தம்
'ஓலா, ஊபர ் ' செயலிகளில் பைக் டாக்சி சேவை நிறுத்தம்
'ஓலா, ஊபர ் ' செயலிகளில் பைக் டாக்சி சேவை நிறுத்தம்
ADDED : ஆக 26, 2025 03:04 AM
பெங்களூரு: கர்நாடகாவில் சட்ட விரோதமாக பைக் டாக்சி இயக்கப்பட்ட நிலையில், நேற்று ஓலா, ஊபர் செயலிகளில் பைக் டாக்சி சேவைகள் நிறுத்தப்பட்டன.
கர்நாடகாவில் பைக் டாக்சிகள் இயங்குவதற்கு கடந்த ஜூன் 16ம் தேதி தடை விதித்து, கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மாநிலம் முழுவதும் ராபிடோ, ஓலா, ஊபர் போன்ற செயலிகளில் பைக் டாக்சிகள் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால், பைக் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து கர்நாடகா பைக் டாக்சிகள் நல சங்கத்தினர் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, கடந்த வாரம் சந்தித்து ஆதரவு கோரினர். கர்நாடகாவில் மீண்டும் பைக் டாக்சியை அமல்படுத்த முதல்வர் சித்தராமையா, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம் கூறுவேன் என ராகுல் உறுதி அளித்ததாக செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில், பைக் டாக்சி செயலி நிர்வாகம், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்தனர். இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி விபு பக்ரு, பைக் டாக்சி விஷயத்தில் விதிகளை, அரசு உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பைக் டாக்சி செயலிகள், கடந்த 21ம் தேதி மீண்டும் பைக் டாக்சி சேவைகளை துவங்கின. நீதிமன்ற உத்தரவை மீறி பைக் டாக்சி இயக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று மீண்டும் ஓலா, ஊபர் செயலிகளில் பைக் டாக்சிகள் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. விரைவில் பைக் டாக்சிகள் மீண்டும் அமலுக்கு வரும் என மட்டுமே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே சமயம் ராபிடோ செயலியில் மட்டும் பைக் டாக்சி சேவை வழக்கம் போல இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் செயலிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பல வித கேள்விகளை எழுப்பி உள்ளது.