/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பறவை காய்ச்சல் எதிரொலி சுகாதார துறை 'அலெர்ட்'
/
பறவை காய்ச்சல் எதிரொலி சுகாதார துறை 'அலெர்ட்'
ADDED : பிப் 09, 2026 05:09 AM
பெங்களூரு: தமிழகத்தின் சென்னையில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக, கர்நாடக சுகாதார துறை அலெர்ட் ஆகி உள்ளது.
தமிழகத்தின் சென்னையின் பறவை காய்ச்சலால் நுாற்றுக்கணக்கான காகங்கள் இறந்த நிலையில், அங்கிருந்து கர்நாடகாவிலும் பறவை காய்ச்சல் பரவி விட கூடாது என்பதால், கர்நாடக சுகாதார துறை முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
மல்லேஸ்வரம் கே.சி.பொது மருத்துவமனை டாக்டர் சுரேஷ் கூறுகையில், ''கோழி பண்ணை மற்றும் கால்நடைகள் தொடர்பான இடங்களில் பணி செய்வோருக்கு, பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. இக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோருக்கு இறப்பு விகிதம் 50 சதவீதம்.
''காய்ச்சல் பரவினால் தொற்றுநோயாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், கண் சிவத்தல் மற்றும் எரிச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, சோர்வு ஆகியவை அறிகுறி. இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
''வைரசால் பாதிக்கப்படும் பறவையின் உமிழ்நீர் அல்லது மலம் மூலம் மனிதர்களுக்கு, பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்,'' என்றார்.

