sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பறவைக்காய்ச்சல் பீதி மக்களுக்கு பரிசோதனை

 பறவைக்காய்ச்சல் பீதி மக்களுக்கு பரிசோதனை

 பறவைக்காய்ச்சல் பீதி மக்களுக்கு பரிசோதனை


ADDED : ஏப் 26, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 11:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரு புறநகர், ஹெசரகட்டாவின் மத்கூர் கிராமத்தில் அரசு சார்ந்த கோழிப்பண்ணையில் இருந்த கோழிக்கு, 'ஹெச்5என்1' தொற்று உறுதியானது. அதன்பின் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் அதிரடி நடவடிக்கை எடுத்து, தொற்று பரவாமல் தடுத்தன.

கோழிகள் அழிக்கப்பட்டன. ஹெசரகட்டா கோழிப்பண்ணையின், ஒரு கி.மீ., சுற்றுப்பகுதி, நோய் பாதிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. தொற்று மனிதர்களுக்கும் பரவி இருக்கலாம் என்பதால், தொற்று தென்பட்ட பகுதியின் 10 கி.மீ., எல்லையில் உள்ள, 22 கிராமங்களின் மக்களுக்கு, ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 28,172 பேரின் தொண்டை திரவத்தை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இவர்களில் யாருக்கும் தொற்று இல்லை என, அறிக்கை வந்துள்ளது.

பத்து நாட்களுக்கு பின், மீண்டும் தொண்டை திரவம் மாதிரி சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இன்னும் அறிக்கை வரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த 90 நாட்கள் வரை, இப்பகுதியில் கோழி வளர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சுகாதாரத்துறை வெளியிட்ட நெறிமுறைகளை, கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us