/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துமகூரு - பெங்களூரு ரயிலுக்கு பிறந்தநாள்
/
துமகூரு - பெங்களூரு ரயிலுக்கு பிறந்தநாள்
ADDED : ஆக 04, 2025 05:17 AM

துமகூரு: துமகூரு - பெங்களூரு பயணியர் விரைவு ரயிலுக்கு, 12வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
துமகூரில் இருந்து பெங்களூருக்கு வேலை, படிப்பு போன்ற பல காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கிலானோர் வந்து செல்கின்றனர்.
இவர்கள் பயணம் செய்வதற்கு ஏதுவாக, 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் 3 ம் தேதி துமகூரு - பெங்களூரு 56926 என்ற எண் கொண்ட, விரைவு பயணியர் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ரயில் துமகூரில் இருந்து காலை 8:15 மணிக்கு புறப்பட்டு, பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்துக்கு 9:55 மணிக்கு வந்தடையும். இதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கிலானோர் பயணம் செய்து பயன் அடைகின்றனர்.
ரயில் அறிமுகம் செய்யப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில், நேற்று ரயிலுக்கு 12வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில், ரயிலின் லோகோ பைலட், கோ - லோகோ பைலட், ரயில்வே அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
துமகூரு ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ரயிலுக்கு வாழை, மா இலைகள், பூ மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தினப்பயணியர், தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.
பட விளக்கம்
ரயில் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய ரயில்வே அதிகாரிகள்.