
திருச்சி: திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் தமிழ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் லட்சுமி நாராயணன் பிறந்தநாள் விழா, அவரது அலுவலகத்தில் நடந்தது.
விழாவில், அமைச்சர் நேரு, மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, பாலன், அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலர் சீனிவாசன், நடிகர் பயில்வான் ரங்கநாதன், பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் சரவணன், பாஜ மாவட்ட முன்னாள் தலைவர் ராஜசேகர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலர் கோவிந்தராஜூலு, நிர்வாகிகள் ஸ்ரீதர், கண்ணன், ஆறுமுகபெருமாள், மைதீன், திருமாவளவன், ஷேக் அலாவுதீன், கமலக்கண்ணன், மேலசிந்தாமணி முத்துக்குமார், மா.கம்யூ., மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன், மூத்த வக்கீல்கள் எட்வின் ஜெயகுமார், சீனிவாசன், கூடுதல் அரசு வக்கீல் ஆனந்தன், வெங்கட், குடமுருட்டி சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
விழா ஏற்பாடுகளை நாகராஜன், மணிகண்டன், கிஷோர்குமார், சங்கர், கோல்டன் இப்ராகிம்ஷா, பிரேம் ஆனந்து, செல்வபுரம் ரமேஷ், முத்தையா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.