ADDED : ஜூலை 14, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துமகூரு : துமகூரு டவுன் கே.ஆர்.பிளாக் பகுதியில் வசிப்பவர் கிஷோர் குமார், 35. தொழில் அதிபர். இவருக்கு, முகநுால் மூலம் டில்லியின் ஜியா சர்மா என்ற பெண்ணுடன், கடந்த ஏப்ரல் மாதம் பழக்கம் ஏற்பட்டது.
பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கிஷோர் குமாரிடம், ஜியா சர்மா கூறினார். இதனை நம்பி 79.75 லட்சம் ரூபாயை கிஷோர் குமார் முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு லாபம் கிடைக்கவில்லை.
ஜியா சர்மாவை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஜியா சர்மா மீது துமகூரு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து உள்ளார்.

